தேன் நிலவு படம் திண்டுக்கல் சோலைஹால் என்று ஒரு திரை அரங்கு
இருந்தது.
அதைத்தவிர சென்ட்ரல், திண்டுக்கல் கொடை ரோடு வழியில்
சக்தி தியேட்டர், நாகல் நகரில் ,இருந்த அரங்கில் பாசமலர்
பார்த்த நினைவு.பெயர் மறந்து விட்டது.
இப்போது அவை எல்லாம் இருக்கிறதோ இல்லையோ.
அப்பாவின் அலுவலகமும் வீடும் இருந்த இடம்
மலைக்கோட்டை அருகில்.
அங்கிருந்து ரயில்வே நிலையம்,
பஸ்ஸ்டாண்ட், இந்தத் திரை அரங்குகளுக்கு
அதாவது சென்ட்ரல்,சக்தி தவிர மற்ற இடங்களுக்குக் குதிரை வண்டியில் போன நினைவு.
அப்போதுதான் ஒரே ஒரு டௌன் பஸ் வந்திருந்தது.
1 என்ற எண் கொண்டது.
அதில் பள்ளிக்கு சென்ற ஒரே ஜீவன் நான் தான்.
தம்பி சென்று கை காட்டி நிறுத்துவான்,.
பிறகுதான் நான் போக வேண்டும்.அப்பாவின் கட்டளை:)
அதையும் நிறுத்திவிட்டேன்.தோழிகள் இன்னும்
நன்மை அல்லவா.
தேன் நிலவு படத்தின் பாடல்கள் அப்போது மிகவும் ரசிக்கப்
பட்டவை. 1961 என்று நினைவு. மிக இனிமையான
''காலையும் நீயே '' பாடல் ராஜாவின் குரலில்
வசந்தமாக ஒலிக்கும்.இசை அமைத்தவரும் அவரே.
2 கருத்துகள்:
சோலைஹால், சென்ட்ரல், சக்தி - இவை மூன்றும் இல்லை... நாகல் நகரில் (இப்போது நான் வசிக்கும் இடத்திற்கு பின்புறம்) N.V.G.B. திரையரங்கு மட்டும் உள்ளது அம்மா...
என்னவொரு இனிமையான பாடல்... மிகவும் அருமையான பாடல்...
அன்பு தனபாலன் , திண்டுக்கல் செய்தி சொல்ல நீங்கள் தான்
எனக்கு இருக்கும் ஒரே நபர்.
மதுரைக்கு விமானத்தில் போய் விட்டொம். இல்லாவிட்டால்
திண்டுக்கல் வந்து உங்களைச் சந்தித்து இருக்கலாம்.
ஆம் நினைவுக்கு வருகிறது
நாகல் நகர் என் .வி.ஜி.பி அரங்கம். அப்போது புதிதாகக் கட்டி இருந்தார்கள்.
ஆஹா. அதுவே 60 வருடங்கள் ஆகிறதே!
தண்ணிர் பிரச்சினை இல்லாமல் இருக்கிறதாம்மா.
தேன் நிலவு ஒரு மகிழ்ச்சிப் படம்.
பாடல் உங்களுக்குப் பிடித்தது ஒரு நன்மை.
வளமுடன் இருக்க பிரார்த்தனைகள்.
கருத்துரையிடுக