திருமங்கலம். ஒரு சிறிய டவுன். மதுரையிலிருந்து 12 மைல்கல் தூரம். அதில் ஒரு ஆறு வருடங்கள் தங்கி இருந்தோம்.
ஒரே ஒரு மெயின் ரோடு.
கிளை பிரியும் சாலையில் அங்கு விலாஸ் வீடும் பெரியக்கடைத் தெருவும்
இருக்கும். அந்த ஊரின் ஒரே ஒரு திரைப்பட அரங்கு ஆனந்தா. இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை படங்கள் மாற்றப்படும்.
எல்லாப்படங்களும் பார்க்க அனுமதி கிடைக்காது.
அத்தைகளோ ,சித்தப்பாவோ வந்தால் ஒரு திரைப்படம் பார்க்க சந்தர்ப்பம் கிடைக்கும்.
ஞாயிற்றுக் கிழமை காலை மணி 10 வாக்கில் ஒரு மணி நேரம் கார்ட்டூன் படம் திரையிடப் படலாம்.!!!!!!!!
மிக்கி மௌஸ் ,டாம் அண்ட் ஜெரி
பார்க்கலாம்.
இப்படி பார்த்த படங்களில் ஒன்று நீலமலைத் திருடன்.
நடிகர் ரஞ்சன் ராபின்ஹுவுட் போல அழகாக்க கம்பீ ரமாக
மலைகள் ,பள்ளத்தாக்குகள் தாண்டி வந்து மக்களைக் காப்பார்.
அஞ்சலி தேவியைக் காப்பார்.
கடைசியி ல் கரம் பிடித்து மணப்பார் .:)
அந்தப் படத்தில் இரு பாடல்கள் மிகப் பிடிக்கும்.
''சத்தியமே நிச்சயமாய்க் கொள்ளடாவும்,
உள்ளம் கொள்ளை போகுதே'வும்.
4 கருத்துகள்:
உள்ளம் கொள்ளை போகுதே - இந்த வலைப்பூவும் அம்மா...
இசைக்கு என்று தனி வலைப்பூ அருமை. இசை ஒலிக்கட்டும். மனதை மகிழ்ச்சி படுத்தட்டும்.
நல்ல பாடல்.
மலரும் நினைவுகள் அருமை.
ஆஹா. அன்பு தனபாலன். நமக்கெல்லாம்
இசையே தெய்வம். உள்ளத்தை வலுப்படுத்த எத்தனை குரல்கள்!!!
நீங்கள் சொன்னதே நல் உற்சாகம்.நன்றி மா.
அன்பு கோமதி,
உள்ளத்திற்கு வலு சேர்ப்பது நல்ல இசை. அது இங்கு ஒலிக்கட்டும்.
நீங்கள் ரசிப்பதே நல் ஆதரவு.
கருத்துரையிடுக