www.kurungudi-valli.blogspot.com

செவ்வாய், ஜூன் 30, 2020

இனிய மாலைப் பூக்களே.

இசை கேட்டு உய்வோம்
 
படம் பன்னீர்புஷ்பங்கள்.

கங்கை அமரன் எழுதி
இளையராஜா அவர்கள் இசையில்,
மலேசியா வாசுதேவன் அவர்களின்
அற்புதமான மனதை இழுக்கும் குரல்.
எத்தனை தடவைகள் கேட்டாலும் 
அலுக்காது.
உள்ளத்தில் என்றும் இனிமை சேர்க்கும்  தேவகானம்.
 இதே படத்தில் திருமதி உமாரமணனின்
மென்குரலில் உச்சஸ்தாயியில் தொடங்கும்
உற்சாகப் பாடல். ஆனந்த ராகம் கேட்கும் காலம்

வண்ண வண்ண எண்ணங்களும்
சின்னச் சின்ன மின்னல்களும்
இனிமை.


சனி, ஜூன் 27, 2020

சிரிப்புதான் வருகுதையா...சீர்காழி

இசை கேட்டு உய்வோம்

பொன்வயல் படத்தில் சீர்காழி கோவிந்தராஜன் பாடிய 'சிரிப்புதான் வருகுதையா. இந்தப் படத்தின் பாடல்களை கவியோகி சுத்தானந்த பாரதி அவர்களும், சுந்தர வாத்தியார் அவர்களும் எழுதியதாகவும், துறையூர் ராஜகோபால சர்மா அவர்கள் இசை அமைத்ததாகவும் தெரிகிறது.

வெள்ளி, ஜூன் 26, 2020

Shelter needed.

இசை கேட்டு உய்வோம்
Another Day in Paradise  by Phil Collins.


She calls out to the man on the street
"Sir, can you help me?
It's cold and I've nowhere to sleep
Is there somewhere you can tell me?"
He walks on, doesn't look back
He pretends he can't hear her
Starts to whistle as he crosses the street
Seems embarrassed to be there
Oh, think twice, 'cause it's another day for you and me in paradise
Oh, think twice, 'cause it's another day for you
You and me in paradise
Think about it
She calls out to the man on the street
He can see she's been crying
She's got blisters on the soles of her feet
She can't walk but she's trying
Oh, think twice, 'cause it's another day for you and me in paradise
Oh, think twice, it's just another day for you
You and me in paradise
Just think about it
Oh Lord, is there nothing more anybody can
தமிழ்க்கு மொழிபெயர்

புதன், ஜூன் 24, 2020

காதலைச் சொல்லவும் இசை ஒரு வழி.

இசை கேட்டு உய்வோம்

என் கணவருக்கு மிகப் பிடித்த பாடகர்.

மிகப் பிடித்த பாடல்.


Fontanelle Secret - yaanan | உச்சிக்குழி இரகசியம்! - யாணன் | channel ar...



இசை கேட்டு உய்வோம்

1950s பழைய பாடல்களின் இனிமையும் சுசீலாம்மாவின் குரலும்

இசை கேட்டு உய்வோம்

பழைய பாடல்களின்  இனிமையும்  சுசீலாம்மாவின் குரலும் 

யார் பையன் படம் இப்பவும் ரசிக்கலாம். ஒரு குழந்தையின் தேடல் படம் முழுக்கப் 
பலரின்  வாழ்க்கையைத் தொட்டுச் செல்கிறது.
காதலர்களை இணைக்கிறது.

பண்பட்ட நடிப்பு.
துளி விரசம் கிடையாது.
நகைச்சுவைக்கு என் எஸ் கே மதுரம் ஜோடி.

இந்தச் சுட்டிப் பையனின் நடிப்பு 
படம் முழுக்க நம்மைக் கட்டிப்போடும்.
டெய்ஸி இரானி  பையன் வேடத்தில்  ஜமாய்ப்பார்.
அவர் ஆட்டுவிக்கும் பெரியவர்கள் அடிபணிந்துதான் 
போக வேண்டும். சுவையான பாடல்களை எழுதியவர் 
மருதகாசி. இசை ஜி.தக்ஷிணாமூர்த்தி.

செவ்வாய், ஜூன் 23, 2020

கிளி பேசிய பாடல்

இசை கேட்டு உய்வோம்

திண்டுக்கல்லில் இருக்கும் போது பார்க்கத் தவறிய படங்களில்
இந்தப் பாடல் இடம் பெற்ற படமும் ஒன்று.

 விஸ்வனாதன் ராமமூர்த்தி இசையும்,  கவிஞர்கண்ணதாசன்
எழுத்தும் கலந்து எல்லார் மனத்திலும், நாவிலும் நடனமாடிய பாடல்.
பணத்தோட்டத்துக்குப் பிறகு இதே போல
நிறைய படங்கள் வந்தன.

தேவர் எடுத்த படங்களுக்கு அனேகமாக
திரு .மஹாதேவன் அவர்கள் இசை அமைத்திருப்பார்கள்.

திங்கள், ஜூன் 22, 2020

தாவணி போட்ட தீபாவளி

இசை கேட்டு உய்வோம்

சண்டை கோழி படம் என்னை மிகவும் கவர்ந்தது.
ராஜ் கண்ணுவின் கம்பீரம். மீரா ஜாஸ்மினின்
படபடா, விஷாலின் பக்குவம் எல்லாமே சுகம்.
அதுவும் இந்தப் பாடலில் குடும்ப ஒற்றுமை
மனதுக்கு இதம்.


தேன் நிலவு

இசை கேட்டு உய்வோம்

தேன் நிலவு படம் திண்டுக்கல் சோலைஹால் என்று ஒரு திரை அரங்கு
இருந்தது.
அதைத்தவிர சென்ட்ரல், திண்டுக்கல் கொடை ரோடு வழியில் 
சக்தி தியேட்டர், நாகல் நகரில் ,இருந்த அரங்கில் பாசமலர்
பார்த்த நினைவு.பெயர் மறந்து விட்டது.
இப்போது அவை எல்லாம் இருக்கிறதோ இல்லையோ.

  அப்பாவின் அலுவலகமும் வீடும் இருந்த இடம்
மலைக்கோட்டை அருகில்.
அங்கிருந்து ரயில்வே நிலையம்,
பஸ்ஸ்டாண்ட், இந்தத் திரை அரங்குகளுக்கு
அதாவது சென்ட்ரல்,சக்தி தவிர மற்ற இடங்களுக்குக் குதிரை வண்டியில் போன நினைவு.
அப்போதுதான் ஒரே ஒரு டௌன் பஸ் வந்திருந்தது.
1 என்ற எண் கொண்டது.
அதில் பள்ளிக்கு சென்ற ஒரே ஜீவன் நான் தான்.
தம்பி சென்று கை காட்டி நிறுத்துவான்,.
பிறகுதான் நான் போக வேண்டும்.அப்பாவின் கட்டளை:)
அதையும் நிறுத்திவிட்டேன்.தோழிகள் இன்னும்
நன்மை அல்லவா.
தேன் நிலவு படத்தின் பாடல்கள் அப்போது மிகவும் ரசிக்கப்
பட்டவை. 1961 என்று நினைவு. மிக இனிமையான
''காலையும் நீயே '' பாடல் ராஜாவின் குரலில்
வசந்தமாக ஒலிக்கும்.இசை அமைத்தவரும் அவரே.