www.kurungudi-valli.blogspot.com
செவ்வாய், ஜூன் 30, 2020
இனிய மாலைப் பூக்களே.
திங்கள், ஜூன் 29, 2020
சனி, ஜூன் 27, 2020
சிரிப்புதான் வருகுதையா...சீர்காழி
வெள்ளி, ஜூன் 26, 2020
Shelter needed.
"Sir, can you help me?
It's cold and I've nowhere to sleep
Is there somewhere you can tell me?"
He pretends he can't hear her
Starts to whistle as he crosses the street
Seems embarrassed to be there
Oh, think twice, 'cause it's another day for you
You and me in paradise
He can see she's been crying
She's got blisters on the soles of her feet
She can't walk but she's trying
Oh, think twice, it's just another day for you
You and me in paradise
புதன், ஜூன் 24, 2020
காதலைச் சொல்லவும் இசை ஒரு வழி.
மிகப் பிடித்த பாடல்.
1950s பழைய பாடல்களின் இனிமையும் சுசீலாம்மாவின் குரலும்
செவ்வாய், ஜூன் 23, 2020
கிளி பேசிய பாடல்
திங்கள், ஜூன் 22, 2020
தாவணி போட்ட தீபாவளி
தேன் நிலவு
ஞாயிறு, ஜூன் 21, 2020
நீலமலைத் திருடன்
பூஜைக்கு வந்த மலர்
எண்ணங்கள் எழுத்துக்கள்
வல்லிசிம்ஹன்
எல்லோரும் வளமாக வாழ வேண்டும்
எண்ணங்கள் எழுத்துக்கள்பலவேறு உத்திகளை கடைபிடித்து பாசிட்டிவ்
எண்ணங்களை வளர்க்க இந்த நேரத்தைத்
தாண்டி வரவேண்டி இருக்கிறது.
சென்னையிலிருந்து ஏதாவது நல்லவை அல்லாத செய்தி வரக்கூடாது
என்றே பிரார்த்தனை.
மாற்றிச் சொல்ல வேண்டுமானால் நல்ல செய்திகளுக்காக காத்திருக்கும் நேரம்.
கடைப்பிடிக்கும் வழிகள், நல்ல சமையல்,
கேட்க நல்ல இசை, படிக்க நல்ல புத்தகங்கள்,
பிரார்த்தனை தொடர்ச்சியாக ஒலிக்கும் ஒலி .
எழுத, படிக்க என்று உட்கார்ந்து விட்டால்
காலில் வீக்கம் வந்து விடுகிறது.
என்னால் மற்றவர்களுக்கு கவலை.
இதைத் தவிர வேறென்ன செய்ய முடியும்
என்று யோசித்த போது ,
தோன்றிய எண்ணம்,
இசைக்காக ஒரு பதிவு வைத்துக் கொள்ளலாம்.
பாடலைப் பதிந்து கொண்டு என் நாச்சியார் பதிவில்
அதைப் பற்றி எழுதாவிட்டால்
எதோ தவறாகச் செய்த மனப்பான்மை
பாதிப்பு வருவதால்,
என் பழைய வலைப்பூ குறுங்குடி வல்லியைத்
தூசி தட்டி, திரை இசை எல்லா வகைகளும் ,
என் வாழ்வில் வெவ்வேறு அங்கம் வகித்த நேரங்களில் என்னுடன் துணை வந்த பாடல்களை
பதிய ஆரம்பித்தேன்.
இது தனிப்பட்ட செல்வம். காதுகள் செயல் படும் வரை கேட்கலாம்.
இனிதான் செம்மையாக அமைக்க வேண்டும்.
''எனக்குப் பிடித்த பாடல் அது உனக்கும் பிடிக்குமே''
என்று சொல்ல வரவில்லை.:)
முடிந்த போது யாரும் கேட்கலாம்.
இது இப்போதைய தேவை எனக்கு.
சோர்ந்து போக விரும்பவில்லை.
அவசியமில்லாத பயமுறுத்தும் காணொளி
காண விருப்பம் இல்லை.
எல்லோரும் தொலைக் காட்சிகள், செய்தி தாள்களைப் படிக்கிறோம் .
நாம் சொல்லித்தான் யாருக்கும் தெரிய வேண்டும் என்ற அவசியம் இல்லை.
அதனால் செய்தி வீடியோக்களை பதிய ப்
போவதில்லை. இந்த புத்தி வர இத்தனை நாட்கள் ஆயிற்று.
இதோ மருந்து கண்டுபிடித்துக் கொண்டிருக்கிறார்கள்.
வந்து விடுவோம். இறை வழி காட்ட நாமும் மீளுவோம்.
அவனே காப்பான்.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
இதோ என் புதிய பழைய தளம் இசைக்காக.
www.kurungudi-valli.blogspot.com.
சனி, ஜூன் 20, 2020
MLV-Mysore-01-12-ArumO-Aval-mAnd-composer-kaNNan_iyengAr
வெள்ளி, ஜூன் 19, 2020
புதன், ஜூன் 17, 2020
கட்டோடு குழலாட ஆட
அறுபதுகளில் வந்த ப'' வரிசைப் படங்கள் அனைத்துமே வெற்றி அடைந்தன.
இந்தப் படம் பெரிய இடத்துப் பெண்.
எம் ஜி ஆர்,சரோஜாதேவி நடித்து வெளிவந்தது.
இசை எம்.எஸ் விஸ்வநாதன் ,ராமமூர்த்தி அவர்கள் .
பாட்டில் இளங்குமரிகளாக வருபவர்கள் மணிமாலாவும், ஜோதி லக்ஷ்மியும். எங்கள் பள்ளி நாட்களில் பார்த்தப்படம்.
இனிய இசை நிரம்பி
எல்லோரையும் மகிழ்வித்த படம்.
இசையை வழிபடுவதால் ஏற்படும் இன்பம்.
இன்றிலிருந்து எனக்கும் மற்றும் சிலருக்கும்
பிடித்த திரைப்பட ,மற்றும், முன்னாள்
பாடகர்கள் இசையைப் பதியலாம் என்று நினைக்கிறேன்.
இது எனக்குப் பிடித்த பொழுது போக்கு. ஆத்மாவைத் தொடும் வழி.